News Just In

6/04/2024 05:44:00 PM

அம்பாறை மாவட்ட மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் !ஐக்கிய மக்கள் சக்தியில்

 அம்பாறை மாவட்ட மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.அதேபோன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதியத்தலாவ பிரதிநிதி, அம்பாறையிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று (03) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மதவாச்சி மாவட்ட அமைப்பாளருமான திஸ்ஸ கரல்லியத்தே ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து கொண்டார்.

இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் மதவாச்சி தொகுதியின் இணை அமைப்பாளராக கரல்லியத்தே நியமிக்கப்பட்டுள்ளார்.கரல்லியத்தே அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்ததுடன், சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

May be an image of 1 person, beard and lake

No comments: