
படுகொலையுண்ட தமது உறவுகளை நினைவேந்தும் நமது மக்களின் உரிமையை அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மறுப்பது நாட்டில் அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும் என புளொட் அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தை நிதானத்தோடும், நீதி - நியாயத்தோடும், தார்மீகத்தோடும் அணுகும்படி தனது பொலிஸ் கட்டமைப்புக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுக்கமாகப் பணிப்புரை கொடுத்து வழிநடத்த வேண்டும், அதில் அவர் தவறுவாரேயானால் முன்னரும் சில தடவைகள் தமிழர்களிடம் அரசியல் பாடம் படித்த கசப்பான அனுபவம் போன்ற ஒரு பட்டறிவை திரும்பவும் அவர் பெற வேண்டிய துர்ப்பாக்கியம் நேர்ந்தாலும் நேர்ந்து விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகித்தவர்கள் சம்பூரில் ஈவிரக்கமற்ற முறையில் இரவு வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
No comments: