News Just In

4/03/2024 07:54:00 PM

மூதூரை உலுக்கிய படுகொலை!





மூதூரில்(Mutur) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு குழுவினரால் இன்று அதிகாலை மேற்படி நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மூதூர், ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறங்குதுறைப் பகுதியிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறங்குதுறைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஈச்சலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: