
இஸ்ரேல் - ஹமாஸ் போரானது தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதான இராணுவ அதிகாரி தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஹமாஸ் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதை கண்டுபிடிக்க தவறியமை உட்பட தவறுகளிற்கு பொறுப்பேற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனெரல் அகாரொன் ஹலிவா தெரிவித்துள்ளார்.
இதன்படி தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றும் வகையில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவு செயற்படவில்லை என்பதை தனது கடிதத்தில் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும், ஒக்டோபர் ஏழாம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகிய இஸ்ரேலின் முதலாவது உயர் அதிகாரி இவர் ஆவார். அத்துடன் இஸ்ரேலிய இராணுவமும் புலனாய்வு பிரிவினரும் பல முன்னெச்சரிக்கைகளை தவறவிட்டனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
No comments: