News Just In

2/08/2024 11:24:00 AM

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்!





முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது இறக்குமதி செய்த மருந்துகளே சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுடனான விசேட கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அதிக விலைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: