News Just In

2/08/2024 05:09:00 AM

ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பரிந்துரை!



உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பரிந்துரை!

உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE) கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாகக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறை சேரியின் செயலாளருக்கும் இடையில் புதன்கிழமை (07) கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு நியமனம் வழங்குமாறு திறைசேரிக்கு செந்தில் தொண்டமான் பரிந்துரை விடுத்துள்ளார்.

No comments: