News Just In

2/09/2024 09:08:00 PM

வீதி விபத்துக்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தவும் !




வீதி விபத்துக்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரனால் மாவட்ட செயலகத்தின் கவனத்திற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்துகள்

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மைக் காலங்களில் வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது பிரதான வீதிகளில் நெல் உலர்த்துவது அல்லது காயப்போடுவது ஆகும்.

விவசாயிகள் இதற்காக பிரதான வீதிகளின் அரைவாசியை விட அதிக பகுதியை பயன்படுத்துகின்றார்கள்.

சட்ட ரீதியாக இதற்கு அனுமதி இல்லை எனினும் விவசாயிகளின் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அதிகாரிகளும் பொறுப்பானவர்களும் இதை கண்டு கொள்வதில்லை. இவ் வருடம்(2024) இரண்டு மரணங்கள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனவே வீதி பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக வீதிகளில் நெல் காயப்போடுவதற்கு சில கட்டுப்பாடுகள் அல்லது ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்துவது காலத்தின் தேவையாகும்

No comments: