News Just In

2/16/2024 09:57:00 PM

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம்!




கிழக்குப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தால் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் 5.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் புதிய விடுதி வளாகத்தை உடனே தாருங்கள்...!, தனித்தனியாக மானியங்கள், ஆய்வகப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குங்கள், அனைத்து மாணவர்களுக்கும் WI-FI வசதிகளை செய்து கொடுங்கள்...!, தாமதமான மகாபொல மாணவர் உதவித் தவணைகள் உடனே வழங்க ஆவண செய்யுங்கள்...! போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கண்டன பேரணியிலும் ஈடுபட்டிருந்தனர்.


No comments: