News Just In

2/10/2024 05:49:00 AM

மாகாண முதலமைச்சராகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அமரர் அசோக ஜெயவர்த்தன மரணித்த செய்தி தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது

 அகில இலங்கை அரசாங்கம் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் கண்ணீர் மல்க தெரிவிப்பு.



(எஸ்.அஷ்ரப்கான்)
மாகாண முதலமைச்சராகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அமரர் அசோக ஜெயவர்த்தன மரணித்த செய்தி தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அகில இலங்கை அரசாங்கம் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.அமரர் அசோக ஜெயவர்த்தன அவர்களின் ஞாபகார்த்த அனுதாபம் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு லோகநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றும்போது,
அசோக ஜயவர்த்தன அவர்கள் மனித குல மாணிக்கமாகத்தான் நான் பார்க்கிறேன். 1990 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த கொடிய யுத்தத்தினால் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அகதிகளாக கொழும்பு மாநகரத்தின் அகதிகள் முகாம்களில் இருந்து, அகதி அந்தஸ்து கோரி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழலின்போது 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதிக்கு பின்னர் ஒரு யுத்த சூழ்நிலையில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் பதிவேட்டு அறையில் மேலதிக பதிவாளர் நாயகமாக கடமையாற்றிக் கொண்டிருந்த அசோக ஜயவர்த்தன அவர்கள் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றிய சேவை எங்களால் மறக்க முடியாது. அவருடன் நான் கடமையாற்றிய வேளையில் அவர் என்னை ஒரு சகோதரனாகத்தான் கருதினாரே தவிர ஒரு உத்தியோகத்தராக என்னை கருதவில்லை. நான் தொழிலுக்கு சென்ற வேளை என்னை அரவணைத்து நான் கொழும்புக்கு அகதியாக சென்ற அங்கு வேலைக்கு சென்றபோது என்னை ஒரு சகோதரனாகவே அவர் அரவணைத்து செயல்பட்டார். இதனை என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாது. தமிழோ முஸ்லிமோ யாராக இருந்தாலும் அன்பாக பழகி ஆதரவாக அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றக்கூடிய மிக சிறப்பான பண்புள்ள ஒருவராக மனிதருள் மாணிக்கமாகவே இவர் காணப்பட்டார் என்று கூறலாம்.

இவ்வாறு அவர் ஒரு நேர்மையான அதிகாரி என்று கூறலாம். பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற ஒரு அதிகாரி அரசியலில் ஈடுபடுவதற்கு நேரமில்லை ஏனென்றால் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் வேலை செய்கின்ற ஒருவர் 24 மணித்தியாலமும் சேவை செய்ய வேண்டிய தேவை இருந்தது. ஆனாலும் அமரர் அசோக ஜயவர்த்தன அவர்கள் அவருடைய திறமையின் வெளிப்பாட்டின் காரணமாக பதிவாளர் நாயகம் நாயகம் திணைக்களத்தின் பதிவாளர் நாயகமாக இருந்து கொண்டு அரசியலில் ஈடுபட்டது இலங்கை அரசியலில் ஒரு வரலாறாகும்.

இவரது இழப்பில் துயருற்றிருக்கும் அனைவருக்கும் மற்றும் குறிப்பாக அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் கூறினார்.

No comments: