News Just In

2/11/2024 07:32:00 PM

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: இராணுவத்திற்கு எதிராக வாக்களித்த மக்கள்!





பாகிஸ்தானில் கடந்த பெப்ரவரி 8ஆம் திகதியன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இணையதொடர்பு தட்டுப்பாடு காரணமாக சுமார் 60 மணி நேரம் கடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும் வாக்கு எண்ணிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் பரவலாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதன்படி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் - இன்சாஃப் (Pakistan Tehreek Insaaf) கட்சியை சேர்ந்தவர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட 264 இடங்களில் 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பலர் சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கானின் கட்சியான பிடிஐ தங்களுக்கு கிடைத்திருக்கும் புகழும் வெற்றியும் வெறும் சமூக ஊடக பிம்பத்தால் வந்ததல்ல, உண்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆதரவாளர்களைக் கொண்டுள்ளதால் கிடைத்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.பிடிஐ கட்சி அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு குறைவாக 32 இடங்களை பெற்றுள்ளது.

No comments: