News Just In

2/05/2024 02:38:00 PM

பூமியை போன்று உயிர்வாழ புதிய கிரகம் கண்டுபிடிப்பு!




உயிர்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலுடன் கூடிய புதிய கிரகமான “சூப்பர் எர்த்” பற்றிய ஆய்வு அறிக்கைகளை அமெரிக்காவின் நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய கிரகத்திற்கு “TOI-715 b” என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது பூமியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும், இதனை ஒருமுறை சுற்றிவருவதற்கு சுமார் 19 நாட்கள் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பூமியை விட ஒன்றரை மடங்கு பெரிதான இந்த கிரகம் குறித்து நாசா மேலும் ஆய்வுகளை நடத்தி வருகிறது.

No comments: