நேற்றைய தினம் இந்திய துணை உயர்ஸ்தானிகரான டாக்டர். சத்யஞ்சல் பாண்டே அவர்களுக்கும் எமக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில்சாணக்கியனுடன் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான த. கலையரசன் அவர்களும் முன்னாள் மாநகர முதல்வர் தி. சரவணபவன் உட்பட மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் கலந்துகொண்டனர்.
இவ் சந்திப்பின் போது வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அத்துடன் சமகால அரசில் சம்பந்தமாகவும் எமக்கு தீரா பிரச்சனையாகவுள்ள மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை தொடர்பிலும் நேற்றைய கலந்துரையாடல் அமைந்திருந்தது
No comments: