
பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (06.2.2024) இடம்பெற்றுள்ளது.
சட்டத்தரணி ஊடாக பெலியத்த பொலிஸாரிடம் முன்னிலையான நபரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இம்புல்கொட அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 22 ஆம் திகதி பெலியத்த பகுதியில் வைத்து ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராஎனப்படும்உட்படஐவர்சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் பல சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments: