News Just In

2/19/2024 06:56:00 PM

கல்லடி சக்தி வித்யாலயத்தில் உயர் கல்வி போதனை இன்று ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்!




(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
மட்டக்களப்பு கல்வி வலயத்து க்குட்பட்ட கல்லடி சக்தி வித்தி யால யத்தில் கல்வி போதனைகளை விஸ்தரிக்கும் பொருட்டு கல்வி பொது தராதர சாதாரண வகுப்புகளை  ஆரம்பிக்கும் நட நடவடிக்கை இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

கல்லூரியின் அதிபர்எஸ். பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சரும் மட்டகளப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமானசிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக இந்த சாதாரண வகுப்பு போதனைகளை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதற்கென புதிய வகுப்பறைக்கட்டிடம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி ஷாமினி ரவி திட்டமிடல் பிரதி பணிப்பாளர் திருமதி கரண் யா சுபாகரன் ராமகிருஷ்ண மிஷன் முகாமை யாளர் சுராச்சி சானந் தா மகராஜ் மாணவர் சங்கம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்.

இப்பாடசாலையின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்ட ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் பிரதேச பெற்றோர்அபிவிருத்தி சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணி வித்தும் கௌரவிக்கப்பட்டார்.

இவ்வருடத்துக்கான இலவச பாட விநியோகத்தையும் ராஜாங்க அமைச்சர் சிவனே துரை சந்திரகாந்தன் வைபவ ரீதியாக ஆரம் பித்து வைத்தார்.

ராஜாங்க அமைச்சர் சந்திர காந்தன் இங்கு கருத்து வெளியிடு கையில் ;-பின்தங்கிய பிரதேச கல்வி அபிவிருத்தியி ல் அரசாங்கம் கூடுதல் கரிசனை காட்டி வருகிறது அந்த வகையில் இப்பிரதேச பாடசாலையின் கல்வி போதனையை விஸ்தரிப்பதற்கு தாம் முயற்சி எடுத்தமைக்கு தான் மனமார மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் இங்கு மேலும் கருத்து வெளி யிடுகையில் ;-இந்திய நாட்டு உதவி திட்டங்கள் தற்பொழுது வடபகுதியில் மாத்திரம் பயன்படுத்து வதற்கு இந்திய அரசாங்கம் வழி செய்திருப்பதாகவும் காலத்தின் தேவை கருதி கிழக்கு மாகாணத்திற்கும் இந்திய அரசாங்கம் கல்விஅபிவிருத்தி உட்பட ஏனைய உதவிகளை வழங்குவதற்கு முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதே போல இந்த பாடசாலையில் ஆங்கில போதனை மற்றும் கணினி அறிவு வளர்ச்சி பெற தன்னால் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் இங்கு தெரிவித்தார்.



No comments: