சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறையில் இன்று (03)காலை சுமார் 09.40 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் சுமார் 12 வயது பாடசாலை மாணவன் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்னால் நடைபெற்றுள்ளது.
சம்மாந்துறையில் உள்ள தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ள தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறைப் பக்கமிருந்து அம்பாறையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கென்டர் ரக வாகனம் நேரடியாக மோதியதிலேயே மாணவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.
சம்மாந்துறை பிரதான வீதி, உடங்கா 02 இல் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் முன்னால் வசிக்கின்ற ஏ.எம்.பாஸீர் (வயது 12) எனும் மாணவனே மேற்படி விபத்தில் மரணமடைந்துள்ளார்.
விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு மரணமடைந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: