News Just In

2/03/2024 03:27:00 PM

சுதந்திரதினத்திற்கு தயராகும் மட்டு நகர்!




சுதந்திர தினத்தையொட்டி மட்டக்களப்பு நகரம் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நாளை மறுதினம் 04.02.2024 மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.

உணவுத் திருவிழா கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமாகிய எந்திரி என்.சிவலிங்கத்தின் வழி நடாத்தலில் மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடிப் பாலம் உள்ளிட்ட கல்லடி வரையிலான பிரதான வீதி உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு மின் குமிழ்களிலான அலங்கார வேலைகளும் இடம்பெற்று வருகின்றன.


மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் சுதந்திரதினத்தன்று மாலை 6.30 மணிக்கு பழைய கல்லடி பாலத்தில் கடைத்தொகுதிகள் மற்றும் உணவுத் திருவிழா உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: