நூருல் ஹுதா உமர்
மாவடிப்பள்ளி பிரதேச மக்களின் நீண்ட கால தேவையான இருந்துவரும் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் (ATM இயந்திரம்) ஒன்றை மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நிறுவ மக்கள் வங்கி தவிசாளர் சுஜீவ ராஜபக்ஷவை இன்று (09) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துரையாடினார்.
இதன்போது மாவடிப்பள்ளி மற்றும் அதனை அண்டிய பிரதேச பொருளாதார நிலைகள், அரிசி ஆலைகளின் அமைவிடம், பல்வேறு வியாபார தளங்கள் உள்ள பிரதேசம், குறித்த பிரதேசத்தில் எந்த வங்கி களினதும் கிளைகள் இல்லை போன்ற பல்வேறு விஷயங்களை மக்கள் வங்கி தவிசாளருக்கு விளக்கி தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட மக்கள் வங்கி தவிசாளர் சுஜீவ ராஜபக்ஷ கூடிய விரைவில் அதனை நிறுவ தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினருக்கு உறுதியளித்தார்.
No comments: