News Just In

2/06/2024 09:37:00 AM

அடுத்த மாதம் மேலும் 1300 வைத்தியர்கள் நியமனம் !



வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் தற்போது பயிற்சி நிறைவடையும் நிலையில் உள்ளதாக சுகாதார செயலாளர், விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும் பயிற்சி முடித்த 590 வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

இதுவரை காலமும் வெற்றிடமாக இருந்த அரச வைத்தியசாலைகளுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில், எதிர்காலத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: