News Just In

1/31/2024 10:00:00 AM

சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!




நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச். எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் சிறுவர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கானதுமான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்வின் போது ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


No comments: