தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்திற்கான போட்டி குறித்து வெளியில் உள்ளவர்கள் போலியான கதைகளை கூறி மக்களை குழப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடகிழக்கிலிருந்தே இம்முறை தமிழரசுக்கட்சியின் தலைமை பதிவிக்கு போட்டியாளர்கள் போட்டியிடுகிறார்கள். கொழும்பிலிருந்து யாரும் போட்டியிடவில்லை.
தமிழரசுக்கட்சியில் தலைமைத்துவ போட்டிகள் ஒருபோதும் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்தார்.
No comments: