அமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாற்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சுப் பதவிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் பெயர் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கு இதுவரை அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: