News Just In

1/20/2024 02:33:00 PM

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்க்கவேண்டும் - மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை





மும்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்ட முன்வரைவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளநாடாளுமன்றப்பிரதிகளுக்கும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சிவில் சமூகத்தினரால் நேற்று வெள்ளிக்கிழமை (19) இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சி.சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), இரா.சாணக்கியன், ஆகியோருக்கு இது தொடர்பான வேண்டுகோள் கடிதங்கள் அவர்களது அலுவலகங்களில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வேண்டுகோள் முன்வைப்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்திருந்தனர்.

No comments: