News Just In

12/09/2023 06:09:00 AM

பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு!





நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு நேற்று (7) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லீமா பஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய பொதுச் சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.ஹில்மி பிரதம வளவாளராக கலந்துகொண்டு விரிவுரையாற்றினார்.

இந்நிகழ்வின் போது பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சுகாதார கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

பாடசாலை அதிபர்கள் மற்றும் சுகாதார கழக உறுப்பினர்களிடையே சுகாதார விழிப்புணர்வு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதே குறித்த செயலமர்வின் நோக்கமாகும்.


No comments: