News Just In

12/09/2023 06:19:00 AM

உயர்தர பிரிவு மாணவிகளுக்கு பாட தெரிவு தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு!





நூருல் ஹுதா உமர்
க.பொ.த (உ/த) - 2023/2025 கல்வி ஆண்டுக்கான புதிய மாணவிகளை
இணைத்துக்கொள்வதற்கான உத்தியோகபூர்வமாக விண்ணப்பம் வளங்களும் பாட தெரிவு தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி (தேசிய பாடசாலை) கேட்போர் மண்டபத்தில் இடம்பெறும்.

இந்நிகழ்வில் அதிபரின் ஆசிச்செய்தி வாழ்த்துக்களுடன் ஒழுக்க விழுமியங்கள், பல்கலைக்கழக பிரவேசம் உள்ளடங்களாக ஆரம்பமான செயலமர்வில் பிரதி அதிபரினால் (நிர்வாகம்) மாணவர் அனுமதி, இலங்கை கல்வி அமைச்சு சுற்றுநிருபம், நிர்வாக கட்டமைப்புகள் தொடர்பான விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.

உயர்தர பிரிவின் கற்கை நெறிகளான உயிரியல் பெளதீக விஞ்ஞானம், உயிரியல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் கலை ஆகிய பிரிவுகளின் பகுதித்தலைவர்கள், உப பகுதித்தலைவர்கள் ஆகியோர்களினால் பாட தெரிவுகள், பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி, கடந்த கால உயர் தர பெறுபேறுகளின் புள்ளிவிபரவியல், க.பொ.த (ச/த) பெறுபேறுகள் முக்கியத்துவம், உயர்தர அடிப்படை தகைமைகள் மற்றும் பல தலைப்புக்களில் மாணவிகளுக்கு விளக்கமாளிக்கப்பட்டது.

மேலும் கலைப்பிரிவுக்கான பாட தெரிவுகள் அதிகளவில் காணப்படுவதனால் அது தொடர்பான விஷேட விளக்கத்தினை அரசியல் விஞ்ஞான ஆசிரியர் எ.ஏச். சபீர் (L.L.B Hons) அவர்களினால் பல்லூடக ஏறிவை (Multimedia) தொழில்நுட்பத்தின் மூலமாக மாணவிகளுக்கு நிகழ்த்துகை (Presentation) முன்வைக்கப்பட்டது.

விஷேடமாக இம்முறை கல்லூரியின் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) பரிந்துரைக்கு அமைவாக மாணவர் அனுமதி விண்ணப்படிவங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டதுடன் உயர்தர பிரிவுகளை இலகுவில் இனம் கண்டு கொள்வதற்கு உயிரியல் பெளதீக விஞ்ஞானம் றோஸ், உயிரியல் தொழில்நுட்பம் இளம் பச்சை, வர்த்தகம் மற்றும் கலை இளம் மஞ்சள் நிறங்களை அடிப்படையாக கொண்டு உரிய பகுதித்தலைவர்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச் நதிரா, உதவி அதிபர் என்.டி நதீகா, உயர்தர பிரிவு பகுதித்தலைவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


No comments: