பசறையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசறை லுணுகலை பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொப்டன் - யப்பாம தனியார் தோட்டத்தில் தொழிலுக்கு சென்ற நிலையிலே அந் நபர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் அந் நபர் லுணுகலை ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: