News Just In

9/20/2023 04:45:00 PM

வெளியானது உலகக் கிண்ண Anthem பாடல்!





ஒக்டோபர்‌ 05 ஆம்‌ திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட்‌ போட்டிக்கான Anthem பாடல்‌ தற்போது இணையத்தில்‌ வெளியாகியுள்ளது.

ICC உலகக் கிண்ணத் தொடர் 2023 இற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ரன்வீர் சிங் மற்றும் இந்திய பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீதம் ஆகியோரால், நிகழ்வின் அதிகாரப்பூர்வ கீதமான ‘தில் ஜாஷ்ன் போலே’ வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா நடத்தும் ICC உலகக் கோப்பை 2023, ஒக்டோபர் 5 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 19 ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் முடிவடையும்.

இப்போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உட்பட பத்து அணிகள் பங்கேற்கின்றன.

No comments: