News Just In

8/29/2023 03:22:00 PM

சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை – வெளிவிவகார அமைச்சு




ஷி யான் சிக்ஸ் சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கோரிக்கையை மேலும் ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் இலங்கைக்கு வரும் திகதிகள் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறியிருந்தது.

எவ்வாறாயினும், கடல்சார் பாதுகாப்பில் கவனம் செலுத்தி சீன ஆராய்ச்சிக் கப்பலின் வருகை குறித்து இந்திய அரசாங்கம் இலங்கையிடம் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: