
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் பற்றி நாங்கள் வாய் துறந்தால் அவர் தெருவில் நிற்க வேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த. சிவானந்தராஜா தெரிவித்தார்.
நேற்று (10) மட்டக்களப்பில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
சாணக்கியன் தனது வேட்டியை ஒவ்வொரு இடமாக வீசி தற்போது சூறை முள்பத்தையில் வீசியுள்ளதாகவும் அதன் தாக்கம் இனி அவருக்கு தெரிய வரும் எனவும் இதன்போது தெரிவித்தார்.
போராட்டத்தைப் பற்றியும் அதன் வலி பற்றியும் தெரியாத அவர் தமது கட்சியை விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் இல்லையெனவும் அமைப்பாளர் தெரிவித்தார்
No comments: