News Just In

7/10/2023 11:30:00 AM

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கடமையினைப் பொறுப்பேற்றார்!


(சர்ஜுன் லாபீர்)
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று(10) காலை 10.05 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.

இவற்றுக்கப்பால் அரச பணியில் பல உயர்பதவிகளை ஆற்றியுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப் பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் வி.யேகதீஸன்,அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments: