News Just In

7/25/2023 04:30:00 PM

இந்தியா – இலங்கை பாலதிற்கு பதிலாக உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குங்கள் – பொன்சேகா





இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலாக மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவது போன்ற நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் உள்ளக அரசியல் குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, பாலத்தால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கண்மூடித்தனமாக வளர்ந்த நாடுகளின் கருத்துக்களை பின்பற்ற வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

No comments: