News Just In

7/18/2023 04:49:00 PM

கோதுமை மாவின் விலை சடுதியாக குறைப்பு!

அத்தியாவசிய உணவுப்பொருளான கோதுமை மாவின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் மாவிற்கு, பத்து ரூபாவினால் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த விலை குறைப்பானது இன்று (18.07.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: