News Just In

7/19/2023 10:38:00 AM

இலங்கையில் கடுமையக்கப்படவுள்ள போக்குவரத்து சட்டம்!

இலங்கையில் கடுமையக்கப்படவுள்ள  போக்குவரத்து சட்டம்!



ஆபத்தான விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களின் சாரதிகளை பரிசோதிப்பது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ விளக்கமளித்துள்ளார்.

“வாகன சாரதிகள் மதுபானம் மட்டுமின்றி ஆபத்தான போதை மருந்துகளையும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகின்றனர்.

எதிர்காலத்தில், இது தொடர்பாக அடையாளம் காணப்பட்ட பின்னர், தேவையான உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு, மது மற்றும் போதைப்பொருள் தொடர்பான சோதனைகள் ஆரம்பிக்கப்படும்.

குறிப்பாக இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

எதிர்காலத்தில், குறிப்பாக வீதி விபத்துக்கள் ஏற்பட்டால், குறித்த சாரதி நச்சு போதை மாத்திரைகளை உட்கொண்டாரா என்பதை அறிந்துக் கொள்வதற்காக மருத்துவரிடம் ஆஜர்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

எதிர்காலத்தில் அவற்றைச் செயல்படுத்தத் தேவையான திட்டங்கள் குறித்து விவாதித்து வருகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ வெளியிட்ட தகவலுக்கமைய, 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரையில் 137 பேரூந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

ஜூலை 10ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,135 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 1,202 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டியுள்ளார்

No comments: