News Just In

6/10/2023 08:02:00 PM

எனது கனவு நனவாகிவிட்டது! தமிழக வீரர் நடராஜனின் கிரிக்கெட் மைதானம் திறப்பு..தினேஷ் கார்த்திக் வருகை





தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜனின் கிரிக்கெட் மைதானத்தை தினேஷ் கார்த்திக் திறந்து வைக்க உள்ளார்.
தமிழக வேகப்புயல்.

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமாகி மிரட்டியவர் தமிழக வீரர் தங்கராசு நடராஜன்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த இவர் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' எனும் பெயரில் தனது கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார்.

ஜூன்  23ஆம் திகதி இந்த மைதானம் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றொரு தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் திறந்து வைக்க உள்ளார். அவருடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணியும் இணைகிறார்.

 கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா குறித்து நடராஜன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'எனது கனவு நனவாகி உள்ளது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா குறித்து அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்' என கூறியுள்ளார்.








No comments: