
சூரியகாந்திப் பூவை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ரசித்திருப்போம். அவ்வாறு சூரியகாந்தியின் விதைகளும் பல நன்மைகளைக் கொண்டது.
சூரியகாந்தி விதைகளில் விட்டமின்கள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, ஃபிளாவனாய்டுகள் போன்றன அடங்கியுள்ளன இது இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மையளிக்கும்.
இந்த விதைகளில் ஒட்சிசனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.சூரியகாந்தி விதைகளை உட்கொள்வதன் மூலம் பெண்கள் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாப்பை பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் லிக்னன் என்னும் ஒருவகை பாலிஃபீனால் சூரியகாந்தி விதைகளில் காணப்படுகிறது. இது உடலில் ஒட்சிசனேற்றியாக செயல்படுவதோடு பலவித ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
இந்த விதைகளிலுள்ள கல்சியம், இரும்பு, துத்தநாகம் போன்றன எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் உதவும்.இந்த விதைகளிளலுள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இரத்த நாளங்களுக்கு நன்மை செய்யும்.உயர் இரத்த சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரோல் ஆபத்தைக் குறைக்கிறது.இந்த விதைகளிலுள்ள கல்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு நன்மை பயப்பதோடு மன ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தும்.
No comments: