News Just In

6/06/2023 02:55:00 PM

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!




நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லத்திற்கு சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை அவருக்கு வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சிங்கள மொழியில் எழுதப்பட்ட தகவலை வழங்குவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் வந்தனர்.

எனக்கு சிங்களம் படிக்கவோ எழுதவோ தெரியாது என்பதால் அதை ஏற்க மறுத்துவிட்டேன். அதை தொடர்ந்து அவர்கள் சிங்கள மொழியில் எனக்குப் படித்துக் காட்டினார்கள்.

அதன்படி, ஜூன் 8ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் என்னை முன்னிலையாக வேண்டும் என்று தெரிவித்தனர்.

அத்துடன் நான் மருதங்கேணி பொலிஸில் முன்னிலையாகும் வரை எனக்கு வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு கிளிநொச்சி நீதவானிடம் பொலிஸார் விண்ணப்பித்துள்ளதுடன், நான் பொலிஸ் நிலையத்தில் அறிக்கையிடும் வரை வெளிநாட்டுப் பயணம் தடை செய்யப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார் என சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகும் வரை அவருக்கு இத்தடையை விதிக்குமாறு பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடையை விதித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: