News Just In

6/21/2023 12:55:00 PM

வாட்டஸ் அப்பில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்!

அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்!





வட்ஸ்அப் தளத்தில் பயனர்கள், தெரியாத நபர்களிடமிருந்து தங்களுக்கு வரும் அழைப்புகளை சத்தமின்றி அமைதியான முறையில் வைக்கும் (Silence Unknown Callers) புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனாளர்கள் தங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் தெரியாத நபர்களின் தொல்லை அழைப்புகளின் இம்சையில் இருந்து தப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் எப்படி வேலை செய்கிறது என்றால் வட்ஸ்அப் பயனர்களுக்கு வரும் தெரியாத அழைப்புகளை அமைதியான முறையில் வைக்கிறது. இந்த அம்சத்தை செயற்படுத்துவதன் மூலம் ரிங்க்டோன் ஒலி ஒலிக்காது. அதாவது பயனர்களின் அழைப்பு விபர (conduct details) பட்டியலில் இல்லாத எண்களில் இருந்து வரும் அனைத்து அழைப்புகளும் அமைதியான (Silent mode) முறையில் இருக்கும். அதேநேரத்தில் இந்த அழைப்புகள் நோட்டிபிகேஷனில் டிஸ்பிளே ஆகும்.

பயனர்கள் இதை செயற்படுத்த ‘செட்டிங்ஸ் > பிரைவசி > கால்ஸ் > Silence Unknown Callers செயற்படுத்த வேண்டும். அண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் இதை பயன்படுத்த முடியும்.


No comments: