News Just In

6/21/2023 12:44:00 PM

வடக்கு ரயில் மார்க்கம்: இந்தியா மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது!

பயண நேரம் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் குறைக்கப்பு!  



வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் நடத்திய கலந்துரையாடலின் விளைவாக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு இடையிலான சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மார்க்கத்தை அபிவிருத்தி செய்யும் வகையில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான சேவைகள் ஜனவரி மாதம் இடைநிறுத்தப்பட்டன.

இந்தியாவால் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்துடன் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இம்மாதத்தில் நவீனமயமாக்கல் பணிகள் முடிவடைய இருந்தபோதிலும் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.

இதேவேளை, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயண நேரம் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


No comments: