News Just In

6/16/2023 09:01:00 AM

நடமாடும் சேவையால் நீண்ட கால காணிப்பிரச்சினைக்கு தீர்வு!




சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் நீண்ட காலமாக நீண்ட காலமாக தீர்வின்றி இருந்த காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று(15)சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் தீர்வின்றி இருந்த காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களும், அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டன.

அதன்படி காணிகளில் நீண்ட காலமாக குடியிருந்த போதிலும் அதற்கான சட்ட அங்கிகாரத்தைப் பெற்றுக் கொள்ளாதிருந்தவர்களுக்கு காணிகளுக்குரிய உறுதிப் பத்திரங்கள் மற்றும் (பேர்மிட்) அனுமதிப்பத்திரங்கள் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மட் ஹனீபா தலைமையில் வழங்கப்பட்டன.

75 பேருக்கு காணி உறுதிப் பத்திரமும், இன்னும் 75 பேருக்கு காணி பேர்மிட் பத்திரமும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண காணிஆணையாளர்டி.எம்.ஆர்.சி.தகாநாயக்க, அம்பாரை மாவட்ட காணி ஆணையாளர் திருமதி இப்திகார் பானு, அம்பாரை மாவட்ட கச்சேரியின் சிரேஸ்ட காணி உத்தியோகத்தர் கே.எல்.எம்.முஸம்மில், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம் உட்பட பல உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






No comments: