யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவியிடம் பொய் கூறி திருமணம் நடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
43 வயதான லண்டனை சேர்ந்த நபரை 31 வயது என பொய் கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 வயது பல்கலைக்கழக மாணவிக்கு கல்யாண தரகர் ஒருவர் திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளார்.
இந்த நிலையில் பதிவு திருமணம் செய்ய ஆயத்தமான நிலையில், மணமகனின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டை பார்க்கும் போதே அவருக்கு வயது 31 இல்லை 43 என தெரியவந்துள்ளது.
இருப்பினும், குறித்த தரகரிற்கு உண்மையான விபரம் மணமகனால் சொல்லப்பட்டுள்ளது. எனினும் தரகர் இதனை மறைத்துள்ளார்.
No comments: