News Just In

6/22/2023 01:28:00 PM

சர்வதேச யோகா தினம் மட்டக்களப்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது!



மட்டக்களப்பில்சர்வதேச யோகா தினம்!



(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

சர்வதேச யோகாகலை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கில் விசேட நிகழ்வு ஒன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் கிழக்கு பல்கலைக்கழகம் மட்டக்களப்பு தாதிய பயிற்சி கல்லூரி இதற்கு அனுசரணை வழங்கியிருந்தன.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் வல்லிபுரம் கனக சிங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாம நிதி பத்ம ராஜா ஆகியோர் இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். இதன்போது யோகா கலை தொடர்பான விசேட பயிற்சி யோகா கலை பற்றிய பயிற்சி விழிப்புணர்வு நிகழ்வுகளும் இங்கு இடம் பெற்றன தாதிய மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் கள்,சுகாதாரசேவைப்பணியாளர்கள் ,பாடசாலை மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்




No comments: