தியாகத்தை போதிக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை நாட்டின் பொருளாதார சிக்கல் நிறைந்த சூழ்நிலையில் இம்முறை இலங்கை முஸ்லிங்கள் அமைதியான முறையில் நாடுதழுவிய ரீதியில் இன்று கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் நிகழ்த்தினார்.
சாய்ந்தமருது அல்- அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அல்- அக்ஸா பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஏ.ஆர்.எம். றியாஸ் (பஹ்மி) நிகழ்த்தினார்.
சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் சாய்ந்தமருது அப்பிள் தோட்ட திடலில் இடம்பெற்றது. இங்கும் பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கமும் நிகழ்த்தப்பட்டது.
இன்று முஸ்லிங்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் தொழுகையில் ஈடுபட்டிருந்ததுடன், தொழுகை முடிந்தவுடன் தமது அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். மட்டுமின்றி காலமான தமது உறவுகளுக்காக ஜனாஸா மையவாடிகளில் துஆ பிராத்தனையில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.
நூருல் ஹுதா உமர்
No comments: