News Just In

6/23/2023 05:42:00 AM

டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் குப்பை களங்கள் கண்டுபிடிப்பு!

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் குப்பை களங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளது. டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளது.

இதை அடுத்து காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி வாகனங்கள் போன்றவை களமிறக்கப்பட்டு தேடுதல் வேட்டை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டைட்டானிக் கப்பலின் அருகே உள்ள சுற்றுப் பகுதியில் சிதைந்த குப்பை களங்களை நீர்மூழ்கி வாகனங்கள் கண்டுபிடித்து இருப்பதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவை எத்தகைய குப்பை களம் என்பது குறித்து நிபுணர்கள் ஆராய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments: