நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டொலர்களை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.
இந்நிதியில் சுமார் 500 மில்லியன் டொலர்கள் பாதீட்டு ஆதரவிற்காக ஒதுக்கப்படும்.
மேலும், மீதமுள்ள 200 மில்லியன் டொலர்கள் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: