News Just In

12/16/2022 07:00:00 PM

போதைப்பொருள் படகு தொடர்பில் கிடைத்த தகவல்!

பாரியளவான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினர் நேற்றுமுன்தினம் (14) தென் கடலில் வைத்து கைப்பற்றியிருந்தனர். இலங்கை கடற்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையில், பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கையின் இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளுடன் இலங்கையை சேர்ந்த சந்தேகநபர்கள் குழுவொன்றும் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையின் தெற்கே கடற்பகுதியில் பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்படைக் கப்பலான சமுதுரவுக்கு இது தொடர்பில் தகவல் கிடைத்திருந்தது.

அதன்படி, தேவேந்திரமுனைக்கு அப்பால் ஆழ்கடலில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடிக் கப்பல் அவதானிக்கப்பட்டது..

கப்பலை சோதனையிட்ட பின்னர் 200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருள், சந்தேகநபர்களை கைது செய்ய முடிந்துள்ளது.

மேலும், சமுதுர கப்பலினால் கைது செய்யப்பட்ட பல நாள் மீன்பிடி கப்பலுக்கு எரிபொருள் விநியோகிக்க வந்த இந்நாட்டின் மற்றுமொரு பல நாள் மீன்பிடி கப்பலுடன் 06 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

No comments: