News Just In

12/16/2022 01:15:00 PM

இலங்கையில் பாரியளவில் உயர்ந்த தேங்காய் விலை..!




இலங்கையில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே கூறுகையில், தற்போது பெரிய தேங்காய் ஒன்று 150 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பெரிய அளவு கொண்ட தேங்காய் ஒன்று 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேங்காய் விலை

அத்துடன், சிறிய அளவு கொண்ட தேங்காய் 100 ரூபாவிற்கும், நடுத்தர அளவினை உடைய தேங்காய் 175 முதல் 200 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் முழுத் தேங்காய் கொள்வனவு செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்காக சில கடைகளில் உடைத்த தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: