News Just In

11/26/2022 02:46:00 PM

சம்மாந்துறையில் போதைப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது!

போதைப் பொருட்களுடன் 27 வயதினையுடைய பெண் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (25) பி.ப சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜே.ரத்நாயக்கவின் வழிகாட்டலின் அடிப்படையில் போதைப் பொருள் விற்பனை இடம்பெற்ற வீட்டை சுற்றி வளைத்து திருமணமான 27 வயதுடைய பெண் ஒருவரை போதைப் போருட்களுடன் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணிடம் 11 கிரோமும் 50 மில்லி கிராம் எடையுடைய ஐஸ் போதைப் பொருளையும், 435 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே. சதீஷ்கர், பொலிஸ் சார்ஜன் குமாரசிங்க, பொலிஸ் கான்ஸ்டபில் கெளதம் ஆகியோர்களும் இடம்பெற்றிருந்தனர்.

சம்மாந்துறை நிருபர்

No comments: