News Just In

8/29/2022 10:44:00 AM

நாட்டின் பொருளாதார நெருக்கடி நீங்குவதற்கு . வேறுபாடுகளை மறந்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் கிழக்கு மாகாண ஆளுநர் .



(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)
கிழக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனர மைப்பு செய்யப்பட்ட காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் மகளிர் வித்தி யாலயத்தில்இருமாடி நிர்வாகக் கட்டிடத் தொகுதி மற்றும் அன்னை சார தா தியான இல்ல கட்டிடத் தொகுதி யையும் கிழக்கு மாகாண ஆளு நர் அனுராதா யஹம்பத் சம்பிரதாயபூர்வமாக பூர்வமாகத் திறந்து வைத் தார்.

இந்த அபிவிருத்தி பணிகளுக்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தின் சிபாரிசில் சுமார் 30 இலட்சம் ரூபாயை செலவிட்டு இருக்கின்றது இவ் வித்தியாலயத்தின் அதி பர் ஆர். ரகுபதி தலைமை யில் நடைபெற்ற இந்த திறப்பு விழா வைப வத்தில் ஆளுநர் அனுராதா யகம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்

இந்த திறப்புவிழா வைபவத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ் நாஜிம் நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர்எஸ். சுலை மா லெப்பை ,காரை தீவு பிரதேச சபையின் தவிசாளர்கே.ஜே.சிறில் உட்பட கல்வித் திணைக்கள அதி காரிகள் பிரதேச பிரமுகர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா சம்பத் கரு த்து வெளியிடுகையில்;- நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக் கடி யிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அனைவரும் இன மத வேறு பாடு களை மறந்து தற்போதைய அரசாங்கத்தின் நல்ல செயல்பாடு களுக் கு பூரண ஆதரவு நல்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஆளுனர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்;- சகல இனங்களும் மதிக்கப்படுவதன் மூலமே ஒரு நாடு தன்னிறைவு அடைந்த நாடாக கருதப்படும் அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் பல இனங்களும் ஒற்றுமையுடன் வாழ்வது பாராட்டக் கூடியது.

No comments: