News Just In

8/29/2022 10:49:00 AM

உணவுத் தட்டுப்பாட்டை தவிர்க்க விவசாய அமைச்சு மட்டக்களப்பில் விவசாய ஊக்குவிப்புத் திட்டங்களை அமுல் நடத்துகிறது




. .(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் வீட்டுத்தோட்ட செய் கையை விஸ்தரிக்கும் பல திட்டங்களை விவசாய அமைச்சு தற்பொழுது வெற்றிகரமாக அமுல் நடத்தி வருகிறது .

இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வீட்டுத்தோட்ட செய்கையை ஊக்குவிப்பதற்காக விவசாய அபிவிருத்தி அமைச்சு விவசாய உள்ளீடுகளையும் விவசாய உற்பத்தி உபகரணங்களையும் தற்பொழுது இலவசமாக வழங்கி வருகின்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக இந்த விவசாய உபகரணங்களை இலவசமாக வழங்கி வைப்பதற்கு விவசாய அமைச்சு முன்வந்துள்ளது.

இதற்கமைய .மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவி ல் விசேட வீட்டுத்தோட்ட செய்கைக்கு தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உபக ரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று பிரதேச செயலாளர் வி .வாசு தேவன் தலைமையில் பிரதேச செயலக வளவில் இடம்பெற்றது .முன்னாள். இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த உபகரண தொகுதிகளை தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு .வழங்கி வைத்தார் .

இதேவேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் நிதி ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கைத் தொழில் உபகரணங்களை இன் நிகழ்வின் போது வறிய குடும்பங்களுக்கு அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ் .சுதர்சன் மட்டக்களப்பு நகர தமிழர் முற்போக்கு அமைப்பின் இணைப்பாளர் ஜே .ஜேகதாஸ் உள்ளிட்ட பல பிரமுகர்களும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர். .


No comments: