News Just In

8/29/2022 10:20:00 AM

கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்!




தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதற்கு சட்ட தடைகள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த ஜனாதிபதியல்ல, பதவியை இராஜினாமா செய்து தனது பொறுப்பை கைவிட்ட ஜனாதிபதி, எனவே அவருக்கு முன்னாள் ஜனாதிபதி சிறப்புரிமைகள் கிடையாது என்ற சட்ட வாதத்தின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை,கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படுமாயின் அதனை நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த நேரிடலாம்.எனவே உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்தால் அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், மிரிஹானில் உள்ள தனியார் வீட்டை உரிய முறையில் திருத்திக்கொடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: