News Just In

8/20/2022 09:49:00 AM

உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கும் சமூக பெண் தலைவர்களுக்கும் பன்மைத்துவப் பயிற்சிப் பட்டறை




-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உள்ளுராட்சி மன்றங்களில் உறுப்பினராகவுள்ள பெண் உறுப்பினர்கள் மற்றும் சமூகங்களிலுள்ள பெண் தலைவர்களுக்குமான பன்மைத்துவம் மற்றும் ஒன்றிணைத்தல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி மட்டக்களப்பில் தொடராக இடம்பெற்று வருவதாக தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமத செயற்குழு இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை 20.08.2022 இந்த விழிப்புணர்வு நிழ்வு இடம்பெற்றது.

மாவட்ட இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை உள்பட உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த பெண் பிரதி நிதிகளும் சமூக பெண் தலைமைத்துவங்களுமாக சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

வளவாளராக பேராதனைப் பல்கலைக் கழக அரசறிவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆர். ரமேஷ் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.

வீட்டில்> சமூகத்தில்> அரசியலில்> நாட்டில் பன்மைத்துவம் மிளிர வேண்டுமானால் இன மத மொழி அரசியல் பாகுபாடு இல்லாத மனப்பாங்கு ஏற்பட வேண்டும்> மனிதம் பேணப்பட வேண்டும்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 25 வீதமாக கோட்டா முறை பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட்டதினால் இலங்கையில் 340 உள்ளுராட்சி மன்றங்களைப் பிரதிநிதித்துவப்;படுத்தும் 8000 பேரில் சுமார் 1900 பேர் பெண்களாக பிரதிநித்துவம் பெற முடிந்தது.

92 வீதம் எழுத்தறிவு கொண்ட இலங்கையின் சனத்தொகையில் சுமார் 53 வீதம் பேர் பெண்களாக உள்ளனர்.

பெண்களுக்கு அரசியலில் சமத்துவம் இல்லாத நிலைமை காணப்படுகிறது. நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் ஆற்றல் பெண்களிம் உள்ளதால் எழுச்சிப் போராட்டங்கள் ஊடாக இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க முற்போக்கு சிந்தனையுள்ள பெண் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட பெண்கள்> உள்ளுராட்சி மட்டத்தில் பன்மைத்துவத்தைப் பாதிக்கும் காரணிகள்> பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் வகிபாகம் என்பன பற்றி அறிக்கைகள் பெறப்பட்டு தெளிவூட்டல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் என். பாசுதேவன்> சர்வமத பேரவையின் மாவட்ட உதவி இணைப்பாளர் எச்.ஏ.எம். ஹமீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்..

No comments: